தமிழகம் இழந்த பெருமையை-மீட்க, பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பு தர வேண்டும்,” என்று திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் பேசியதாவது: ஐந்தாண்டுகளாக எதையும்-செய்யாமல், ஏழைகளை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு,

மக்களை ஏமாற்றும் விதத்தில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். “டிவி’, கிரைண்டர், பிரிட்ஜ், என்று அடுக்குகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின்-சாதனையாக ஊழல், விலைவாசி உயர்வு, மீனவர்கள் தாக்குதல், கறுப்பு பணம் பதுக்கல், இலங்கை பிரச்னையில் வேடிக்கைபார்த்தது என்று பலவற்றை கூறலாம். ஒருகாலத்தில் நல்லாட்சி நடைபெற்ற மாநிலமாக இருந்த தமிழகம் . சீர்குலைத்துள்ளது. தமிழகம் இழந்தபெருமைகளை மீட்கவேண்டும் என்றால் பாரதிய ஜனதாவுக்கு,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர போவதில்லை என்பது தெரியும். இருப்பினும் எதிர்க்கட்சியாக செயல்பட ஓட்டளியுங்கள். நிச்சயம் நல்லஎதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். பாரதிய ஜனதா, ஆளுங்கட்சியாக இருக்கும் மாநிலங்களிலும், எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களிலும் சிறப்பாக-செயல்படுகிறது.

மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை உட்பட பல்வேறு போராட்டங்களில் களம் இறங்கியுள்ளது. மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட போது, இலங்கை தூதர், வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசப்பட்டது. பார்லி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்தில் 150 பேர் விடுவிக்கப்பட்டனர். எதிர்க்கட்சியின் வேலையை பாரதிய ஜனதா , சரியாக பார்த்துள்ளது.

விலைவாசி-உயர்வுக்கு நிதிஅமைச்சர் பொறுப்பு, “2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராஜா பொறுப்பு; காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், என்று எதுவும் எனக்கு-தெரியாது என்று பிரதமர் கூறுகிறார்.

எனதுகை மிகவும் சுத்தம் என கூறிக்கொள்கிறார். இவர் எதற்கு பிரதமராக இருக்க வேண்டும்? தமிழகத்தில் நல்ல-எதிர்க்கட்சியாக செயல்பட, நல்ல-எண்ணிக்கையில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை சட்டசபைக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச, தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பு தாருங்கள் . இவ்வாறு சுஷ்மா பேசினார்.

Leave a Reply