உண்மை இஸ்லாமியருக்கு புதிய இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது, சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்து விட்டால் உண்மை இஸ்லாமியராக ஆகிவிடலாமா.

1992 ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 250 க்கும் அதிகமான பொதுமக்களை கொன்று குவித்த தீவிரவாதிகளை வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்ல வழிவகுத்து கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்ட! , ஒரு பெண் திருமணம் ஆகியோ ஆகமலோ, ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லமலோ உறவு கொண்டால் அந்த ஆணுடன் சேர்த்து அந்த பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் என்று ஏற்கனவே புதிய தத்துவார்த்த கருத்துக்களை வெளியிட்டிருந்த!!, மகராஷ்டிர மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மி இப்போது மற்றும் ஒரு புதிய தத்துவார்த்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டளிக்காத முஸ்லீம்களும், அக்கட்சிக்கு எதிராக பேசும் முஸ்லீம்களும் உண்மையான முஸ்லீம்கள் இல்லை. அவர்களுடைய டி.என்.ஏ.வை சோதனை செய்ய வேண்டும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை கொள்ளுதல் , தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் உள்ளிட்டவைகளே உண்மை இஸ்லாமியருக்கு அடையாளமாக இருந்தது, இப்போது கூடுதலாக சமாஜ்வாதிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அம்சத்தையும் இதனுடன் புதிதாக சேர்க்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்கள். இஸ்லாமியர் இவர்களுக்கு விசுவாசமாக இருந்ததால்தான் மூன்று முறை (1993-1995, 2003-2007, 2012) இவர்களால் உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்கள் மேல் கொண்ட விசுவாசம் வீண் என்று உணர்ந்ததால் தான் இவர்கள் ஆட்சியை துறக்கவும் நேர்ந்தது.

உத்திர பிரதேசத்தில் 18.5% இஸ்லாமிய வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளி ருசிகண்டுவிட்ட இவர்கள் இப்போது இதே முறையை பின்பற்றி அகில இந்திய அளவில் ஆட்சி அதிகாரத்தில் அமர துடிக்கிறார்கள். எனவேதான் இந்தியாவின் அறிவிக்கப்படாத இஸ்லாமிய போப்பாக நடந்து கொள்கிறார்கள், உண்மை இஸ்லாமுக்கு புதிய இலக்கணத்தையும் வகுத்து இருக்கிறார்கள். டி.என்.எ(D.N.A) சோதனை நடத்த வேண்டும் என்று பரிந்துரையும் செய்துள்ளார்கள்.

உண்மையில் டி.என்.எ(D.N.A) சோதனை நடத்தினால் அனைத்து இஸ்லாமியர்களையும் இந்துக்களாகத் தான் காட்டும், இங்கே உள்ள இஸ்லாமியர் அனைவரும் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. பெரும்பாலனவர்கள் கத்தி முனையிலும், ஏமாற்றப்பட்டும், இஸ்லாமியர் அல்லாதோர் மீதான புதிய வரிகளாலும் , நிதிச் சுமையினாலும், வறுமையினாலும் மாறியவர்களே. இவர்களுக்கு பாட்டனுக்கு பாட்டன் , முப்பாட்டன் அனைவரும் இந்துக்களே. மனிதனை வேண்டுமானால் மதம் மாற்றிவிடலாம் டி.என்.எ(D.N.A) வை எல்லாம் மதம் மாற்ற முடியாது , அந்த விதத்தில் அபு ஆஸ்மியே உண்மை இஸ்லாமியனன்று.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply