தஞ்சை மண்ணில் பிறந்து, தமிழகமெங்கும் படித்து, தலைநகரில் மருத்துவம் பயின்று, தற்போது அமெரிக்காவில், வட கரோலினா மாநிலத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறேன். ஆன்மீகம், விளையாட்டு, அரசியல் என்னும் மூன்றிலும் ஈடுபாடு கொண்டிருந்த நான், இப்போது முதலிரண்டில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்துகிறேன். வண்ணமயில் வாகனன் வடிவேலன் மனதுக்குப் பிடித்த தெய்வம். காஞ்சி காமகோடி மடத்தின் மீதும், ஸாயிபாபா மீதும் மிகுந்த ஈடுபாடு உடையவன். கவிதை எழுதுவதில் [மரபுக் கவிதை அல்ல!] மிகுந்த ஆர்வம் உண்டு. ‘ஆத்மா’ என்னும் அமெரிக்கத் தமிழ் மருத்துவர் அமைப்பின் ஆசிரியராகவும் [எடிட்டர்] பணியாற்றி வருகிறேன். [இந்த அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.] :))

Tags:

Leave a Reply