சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை சுமார் 6.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேபாளம் சிக்கிம் எல்லையில் சிக்கிமிலிருந்து 64 கி.மீ., தூரத்தில் உள்ள கேங்டாக் என்ற இடத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக சிக்கிமில் உள்ள சிக்கிம் மணிபால்

பல்கலைகழகம் உட்பட வீடுகளில் விரிசல் விழுந்தது.ஒரு சில வீடுகளுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்புகள் செயல்படுகின்றன. நிலநடுக்கம் காரணமாக பெருத்த சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சிக்கிமில் மின்சாரம் தடைபட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பெங்காலில் தொலைபேசி இணைப்புகள் தடைபட்டுள்ளன. டார்ஜலிங்கி மற்றும் கேங்டாக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது

{qtube vid:=rPHn7BCSjwQ}

Tags:

Leave a Reply