இந்தியாவில் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்க்காக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை செய்துவருகிறது. பாகிஸ்தானில் அச்சடிக்கபட்ட கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்விட்ட 3 பேரை மத்திய_புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருக்கின்றனர் .

சென்னையில் கைதுசெய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பலின் பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பங்கிருப்பதாக விசாரணையின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.

இதனைதொடர்ந்து ரூபாய் நோட்டுகளை அதற்குரிய இயந்திரங்களின் மூலம் சோதித்து ஒரிஜினல் என உறுதிப்படுத்திய பிறகே கணக்கில் வரவு வைக்கவேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ்_வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுபடுத்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி ஆலோசித்து வருகிறது.

Tags; பிளாஸ்டிக், ரூபாய், நோட்டுகளை, வெளியிட, ரிசர்வ்வங்கி, பரிசிலனை, கள்ள நோட், கள்ள நோட்டு , ரிசர்வ்வங்கி

Leave a Reply