தகவல் உரிமை சட்டத்துக்கு குறைவான நிதி தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்க்காக இந்த ஆண்டு இதுவரை ரூ.77 லட்சத்தை மட்டும் அரசு செலவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது . கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.5 கோடி செலவிடப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்.சி அகர்வால் அனுப்பிய மனுவுக்காக இந்த தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து இதுவரை 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது , ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த சட்டத்தை பற்றி விழிப்புணர்வு எதுவும் ஏற்படவில்லை என நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply