சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உட்பட 47 இஸ்லாமிய நாடுகள் பங்கேற்கின்றன. ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடை பிடிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள்சபை அறிவித்துள்ளது. இதற்காக இந்தியா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஐ.நா.சபையில் 177 நாடுகள் ஆதரவு தந்தன.

ஆனால் இந்த யோகா, இந்துமதத்தின் குறியீடாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ஐ.நாவில் சர்வதேச யோகா தினமாக அறிவிப்பதற்கு ஆதரவளி த்ததில் 47 நாடுகள் இஸ்லாமிய நாடுகள்.. ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான், வங்கதேசம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மற்றும் ஓமன் ஆகியவை இவற்றில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது ..

Leave a Reply