புரட்சிப் படையினரால் கொல்லபட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் ரகசிய இடத்தில் அடக்கம் செய்யபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .

உரிய மரியாதைகள் செய்யபட்ட பிறகு அவரது உடலை ரகசிய இடத்தில் புதைத்துவிட்டோம். இது குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக பிறகு வெளியிடுவோம் என லிபிய இடைகால அரசின் மூத்த_அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடாபி உடல் அடக்கம் செய்யபட்டதை மிஸ்ரடா நகரில் இருக்கும் ராணுவ அதிகாரி ஒருவரும் உறுதிபடுத்தியுள்ளார் . மிஸ்ரடாவில்தான் கடாபி உடல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

{qtube vid:=tuL_SQu8S1c}

Tags:

Leave a Reply