சுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை மறைத்து வைத்துள்ள இந்தியர்கலை பற்றிய தகவல்களை மத்திய-அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கறுப்பு- பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் பாரதீய ஜனதா வினரின் பெயர் இடம் பெற்று இருந்தால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள படும் ‘ என, பாரதீய ஜனதா, தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

நேற்று புவனேஸ்வருக்கு வந்த பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தினுடைய மொத்த மதிப்பு 21 லட்சம்கோடி ரூபாய் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது . கறுப்பு பண விஷயத்தில், மத்திய-அரசு இனியும் தாமதப்படுத்த கூடாது.கறுப்பு பணத்தை மறைத்து வைத்துள்ளவர்கலுனுடைய பெயர்களை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் , அரசு மீதுள்ள நம்பக தன்மையை மக்கள் இழந்துவிடுவர்.

கறுப்பு- பணத்தை மறைத்து வைத்துள்ளவர்களின் பட்டியலில் பா.ஜவை சேர்ந்தவர்களின் பெயர்கள் இருந்தால், கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்காரி கூறினார்.

Leave a Reply