தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் அமலில் இருந்துவந்த கடுமையான மின் வெட்டின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த மின்தேவை தினமும் 12 ஆயிரத்து 500 மெகா வாட். இருப்பினும் தேவையை நிறைவேற்றும் அளவுக்கு

மின்உற்பத்தி இல்லை கிட்டத்தட்ட 3500 மெகா வாட் அளவுக்கு மின்தட்டுப்பாடு உள்ளது. எனவே பல மணிநேர மின் வெட்டு அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் காற்றாலைகள் அமைந்திருக்கும் பகுதியில் காற்று வீசதொடங்கி உள்ளது. இதன்காரணமாக தினமும் 800 மெகா வாட் மின்சாரம்_கூடுதலாக கிடைக்கிறது. எனவே மின்தேவை ஓரளவு குறைந்துள்ளது.

இதனால் கிராமங்களில் 10 மணிநேரம் வரை இருந்து.வந்த மின்வெட்டு தற்போது 5 மணி நேரமாக குறைந்துள்ளது. இரவு நேரமின்வெட்டும் ரத்துசெய்யபட்டுள்ளது.

Leave a Reply