இராமாயணத்தில் ராம-லட்சுமணர்களுக்கு பல விதங்களில் சேவை செய்தவர் ஆஞ்சநேயர்.மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் கௌதம முனிவரின் புதல்வியான அஞ்சனா தேவிக்கும் ,கேசரி மன்னனுக்கும் மகனாக பிறந்தவர் அனுமன்.

அனுமன் பெற்ற வரங்கள்:

ராகு பகவான் ," என் சமுகத்தை சார்ந்த எவராலும் எவ்வித கெடுதலும் நேராது அனுமனுக்கு மட்டுமல்ல.அனுமனை வணங்கி வரும் எந்த மனிதனுக்கும் எங்களால் கெடுதல் நிகழாது விஷத்தாலும் நாக சர்பங்களாலும்,நாக கன்னிகைகளாலும் தோஷம் ஏற்படாது அவர்களின் உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று வரம் அளித்தார்.

சூரிய தேவன் தன் ஒளியில் ஒரு பகுதியை அனுமனுக்கு அளித்து யாரும் எந்த சுழ்நிலையிலும் எந்த உருவத்திலும் எந்த ஆயுதத்தாலும் எந்த காலத்திலும் ஆழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்ற வரத்தை அளித்தார்

பிரம்மதேவன் விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றலையும் சிரஞ்சீவி பட்டதையும் அளித்தார் .

நீரினாலும் வருணாஸ்திரத்தாலும் எந்த ஆபத்தும் நேராது என வருணபகவான் வரம் அளித்தார் .

குபேரன் விஜய சக்தியை அளித்து எந்த போரிலும் அவனுக்கு தோல்வி ஏற்படாது என்ற வரத்தை. எமன் அனுமனுக்கு மரணம் இல்லை என்ற வரத்தையும் என்றும் இளமையாகவும் கட்டுடலுடனும் தோள் வலிமையுடனும் விளங்கும் வரத்தை அளித்தார் .

அனுமன் ஜெயந்தி

Leave a Reply