சியாச்சின் பனி சரிவிலிருந்து மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனு மந்தப்பா நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததை யொட்டி அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது :- ”ஹனுமந்தப்பா உயிரிழப்பு நமக்கு வருத்தம் மற்றும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. உங்களுடைய ஆத்மா சாந்தி யடைய வேண்டும். ஹனு மந்தப்பாவின் உள்ளிருக்கும் வீரன் என்றுமே மறையமாட்டான், ஹனுமந்தப்பா போன்ற வீரர்களை கண்டு நாடே பெருமைகொள்கிறது,” என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Tags:

Leave a Reply