ஆசையே நரகத்தின் வாயிற்படி,ஆசையுள்ளவன் அமைதியாக இருப்பதில்லை,கோபமே பாவத்தை தேடித்தரும் ,தற்பெருமையே தன்னை அழிக்கும்,தலைக்கர்வம் எதிரிக்கு இடம் கொடுக்கும் ,மோகம் தன்னை மிருகமாகும் ,காமம் கண்ணை மறைக்கும் ,எனவே

உயிரைவிட உயர்ந்தது ஒழுக்கம் ,உலகை விட உயர்ந்தது கடவுள் ,பிறர்மனம் நோகும்படி வாழவேண்டாம் ,சகிப்புத்தன்மை வெற்றியை தவிர வேறு தந்ததில்லை ,கடவுளிடம் வேண்டாதே!உனக்கு என்ன தர வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அடுத்த பதினைந்து வருடங்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலை வேண்டாம் அடுத்து பதினைந்து நாட்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு ,கவலையை விட்டு ,கடமையில் இறங்கிச் செயல்படுங்கள்
வெற்றி நம் பக்கம் .

செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும் .
ஏழ்மையில் உள்ளவன் தன்மதிப்பு குறையாமல் வாழ்தல் வேண்டும்.

உழைப்பே உயர்வு தரும்

இந்த உலகில் நாம் கர்மம் புரிவதற்காகவே பிறந்திருக்கிறோம்.மனிதன் தன் உழைப்பில் தான் வாழ வேண்டும். பிறரை ஏமாற்றியோ பிறர் உழைப்பிலோ வாழ்பவன் இழிந்தவன் ஆவான்.அவனை திருடன் என்றே கூறலாம் .
உழைப்பை நம்கடமையாக கொள்ள வேண்டும் .கடமையில் மைந்தராக வாழ வேண்டுமே தவிர மடமையின் மைந்தராக வாழக்கூடாது.உண்மையாகவும் முறையாகவும் உழைக்கும் மக்கள் எவ்வளவு அதிகமாக ஒரு நாட்டில் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த நாடு உலக அரங்கில் உயர்வு பெரும் சோம்பலும் சோர்வும் நன்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லாது .உழைப்பே உன்னுடைய உண்மையான செல்வம்.உழைப்பு மட்டுமே உன்னை உயர்த்தும் என்பதை சரியாக உணர்ந்து கொள் .உழைப்போம் !உயர்வோம் !

வாக்கு நாணயம்

நம்முடைய வாழ்க்கை இன்பமாக அமையவும் மனக்கவலை,துன்பம் ,பயம் ,தாழ்வு மனப்பான்மை இல்லாமல் மகிழ்வுடன் இருக்கவும்.ஒவ்வொரு மனிதனும் நாணயத்தைக் காப்பது அவசியம் .
அப்படி நாணயத்தை வளர்த்தால் ஒன்றுக்கு பத்தாய் பல வழிகளில் நன்மைகள் நம்மை வந்து சேரும்.நாம் அதை வளர்க்காவிட்டால் நாமே படுகுழியில் வீழ்வது போலாகும்.
உலகிலேயே மிக உயர்ந்தும் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காததும் ஒன்று உண்டு என்றால் அது தாய் தான் .
ஆனால் அதைவிட முக்கியம் சொன்ன சொல்லைக்காப்பதுவது .

நன்றி !
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Tags:

Leave a Reply