சர்க்கரைப் பாகாய் பொங்கலிட்டு
சமத்துவப் பொங்கலைக் கொண்டாடுவோம்!
அக்கரைச் சீமை மக்களுமே
ஆனந்தமாய் வாழ வழிகாணுவோம்!

பத்திரமாத்துத் தங்கங்களே! நீங்கள்
கொக்கரக்கோ சேவல் கூவும் முன்னே
பொங்கலோ பொங்கலென- பொங்கி எழ
பொங்கிடும் இன்பம் கோடியுகம்!

உழைக்கும் கரங்கள் கொண்டாடிட,
உகந்த நாள் தானே தைப்பொங்கல்
உயர்ந்து சிறந்த வளம்பெறவே
உழவுத் தொழிலே கைகொடுக்கும்!

குமரிப் பெண்களின் கும்மி சத்தம்
குலவிப் பாடிட வலுப்பெறுமே
குலுங்கிப் பெண்கள் கும்மி கொட்ட
குதூகலம் பொங்கல் சிறந்திடவே!

தைபிறந்தாலே வழிபிறக்கும்-நம்
கைகள் ஒன்றிணைய நாடு செழிக்கும்!
தைப்பொங்கலாலே சமத்துவம் நிலைக்க
உவகைப் பொங்கலிட்டு அகமகிழ்வோம்!

– கவிஞர் செம்போடை, வெ.குணசேகரன்.

Leave a Reply