அரியானாவில் கார்குண்டு தாக்குதல் போலீசாரின் முன்னெச்சரிக்கை காரணமாக முறியடிக்கபட்டது. இந்தசதித்திட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.

அரியானாவின் அம்பாலா ரயில் நிலையத்தில் இண்டிகா கார் ஒன்று பல

மணி நேரம் யாரும் எடுக்காமல் நின்றது, கார் உரிமையாளர் யாரும் பல மணி நேரமாக வராததால் சந்தேகம் அடைந்த போலிசார் காரை சோதனையிட்டனர். இதில் 5 கிலோ ஆர் டி. எக்ஸ்., வெடிபொருள் , டைமர்கள் , டெட்டனேட்டர்கள் இருந்தன. வெடி குண்டு நிபுணர்கள் வந்து வெடி பொருட்ளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்று செயலழிக்கச்செய்தனர்.

கார் குண்டுகள் ஜம்மு காஷ்மீரிலிருந்து கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இந்தசம்பவத்தை தொடர்ந்து முக்கிய_நகரங்களில் போலீசார் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர் .

{qthbe vid:=3TlgQ1Ac8yU}

Leave a Reply