அரியானாவில் , அரசு தொழிற் மேம்பாட்டு திட்டதிற்காக ஒதுக்கபட்ட நிலத்தை தனது தந்தையின் மணிமண்டபம் கட்டபயன்படுத்தியதாக அந்த மாநில முதல்வர் மீது நிலமோசடி புகார் எழுந்ததுள்ளது.

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபிந்தர் சிங் ‌ஹூடா இருக்கிறார் . அரியானாவின் ரோக்டாக்

மாவட்டத்தில் அரியானா தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில் சுமார் 3ஆயிரம் ‌ஏக்கர்நிலம் விவசாயி களிடமிருந்து கையகபடுத்தப்பட்டது.

கையப்படுத்தபட்ட நிலத்தில் தொழிற் துறை மாதிரி நகரம் அமைக்க திட்டமிடபட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிலத்தில் 42ஏக்கரினை முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, தனது தந்தைக்கு மணி மண்டபம் கட்ட திட்டம் வகுக்கபட்டதாக புகார் எழுந்துள்ளது . இதற்காக பூபிந்தர் சிங் ஹூடா தனது அறகட்டளையின் ‌பெயரில் இந்த நிலத்தை (42ஏக்கரினை) கையகபட்டுத்தியுள்ளதாக தெரிகிறது .

இதனை அறிந்து விவசாயிகள், கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு திட்டதி்ற்காக ஒதுக்கபட்ட நிலத்தை சொந்த காரணங்களுகாக உபயோகிப்பதா என்று கூறி இதுதொடர்பாக ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Tags:

Leave a Reply