கறுப்பு பண விவகாரத்தில், ஹசன் அலி மீது மத்தியஅரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அருண் ஜேட்லி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது ; ஹசன்அலி பெரியளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஆனால், கறுப்பு-பணம்

தொடர்பாக எந்த ஒரு ஆதாரத்தையும் அமலாக்க துறை இதுவரை கையகப்படுத்தாமல் இருப்பது எப்படி என தெரியவில்லை?

இந்த பிரச்னையில் மத்தியஅரசு உடனடியாக தலையிட வேண்டும் , ஹசன்அலி மேல் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என்று அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

70 ஆயிரம் கோடி ரூபாய் வரை கறுப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது

Leave a Reply