மத்திய மந்திரிகள் குழு_தயாரித்த லோக்பால் வரைவு மசோதா மற்றும் தன்னுடைய_குழு தயாரித்த லோக்பால் வரைவுமசோதா தொடர்பாக மத்திய மந்திரி கபில்சிபல் தொகுதியான சாந்தினி_சவுக் பாராளுமன்ற தொகுதியில் மேற்கொண்ட கருத்து கணிப்பில் 85% பேர் தங்களுடைய மசோதாவுகே ஆதரவு தந்திருப்பதாக அன்னா ஹசாரே நிருபர்களிடம் தெரிவித்தார் .

மத்திய மந்திரிகள் தயாரித்த மசோதாவுக்கு ஆதரவுஇல்லை. எனவே மக்கள்கருத்தை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக காங்கிரஸ்சின் செய்தி தொடர்பாளர் மனீஷ்திவாரி கூறியதாவது அன்னாஹசாரே நடத்திய கருத்துகணிப்பு பற்றி கேள்விபட்டேன். 2014ம் ஆண்டு, அவர் கருத்துகணிப்பு நடத்திய சாந்தினி_சவுக் பாராளுமன்ற_தொகுதியில் போட்டியிட தயாரா? அப்போது உண்மை வெளிவரும் என்று தெரிவித்தார்

சிந்திக்க; சோனியா காந்தியிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக , கபில்சிபல் மற்றும் மனிஷ் திவாரி ஆகிய அதிமேதாவிகள், அன்னஹஜாரே போன்ற தியாகிகளை இகழ்வதும் கேலிசெய்வதும் சோனியாவுக்கு செய்யும் நன்றியாக கருதுகின்றனர் .

அன்னா ஹஜாரே போன்ற நல்ல ஆன்மாக்கள் தேர்தலில்நிற்க சூதும்வாதும்,மக்களை ஏய்த்து ஒட்டுவாங்க கற்றுகொள்ள வேண்டும்.அது காங்கிரஸ் கட்சியினரால் மட்டுமே இது முடியும்.

காந்திஜி என்ன தேர்தலில்_நின்றா மக்களுக்கு சேவைசெய்தார்.இதே காந்திஜியின் பெயரை சொல்லியே மக்களை ஏமாற்றி காங்கிரஸ் ஒட்டு வாங்கவில்லையா? அன்று நேருவின் (காங்கிரஸ்) தவறான அரசியல் கொள்கையால் அன்று சீனாவிற்கு நாம் தாரைவார்த்தது 1 ,64 ,000 சதுர மைல்கள்! இன்று காங்கிரஸ்சின் தவறான அரசியல் கொள்கையால் நாம் தாரைவார்த்தது பலாயிரம் அப்பாவி (இலங்கை) தமிழ் உயிர்கள்

Tags:

Leave a Reply