இன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், அதில் வஞ்சம் இல்லாமல் இந்தியாவையும், மோடியையும் புகழ்ந்ததையும் பற்றி அதிகம் பேசாதவர்கள். திரும்பி போகும் போது மற்ற நாடுகளுக்கு கொடுக்க மறுத்த சிறப்பு ஆயுதங்களையெல்லாம் பல சலுகைகளுடன் அள்ளி கொடுத்து விட்டு சென்ற பொழுதும்  வாய் திறக்காதவர்கள் .

இந்தியாவின் நெருக்கடிக்கு இணங்கி பாகிஸ்தானுடனான பாலிய நட்பை அமெரிக்க குறைத்த பொழுது, வருடம் வருடம் அதற்கு கொடுத்து வந்த பல 100 கோடி சிறப்பு நிதிகளை நிறுத்திய பொழுது, பாக் ஆதரவு பல தீவிரவாத இயக்கங்களின் சொத்துக்களை சர்வதேச அளவில் முடக்கிய பொழுதெல்லாம் போற்றாதவர்கள். இன்று அளவுக்கு அதிகமாக தூற்றுகிறார்கள் பயந்துவிட்டார் என்று.

மலேரியா நோய் சிகிச்சையில்  முக்கிய பங்காற்றும் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகள், கொரோன சிகிச்சையில் பரிசோதனை அடிப்படையிலேயே உள்ளது. கடுமையாக பாதிக்க பட்டவர்களுக்கு பயன் படுத்தியதில் பலன் அளித்துள்ளது. இதை அமெரிக்காவும் அங்கீகரித்துள்ளது. இதனால் உலக அளவில் இதற்கான தேவை திடீரென உயர்ந்தது.

இந்நிலையில் தான் அத்தியாவசிய மருந்துகள், வெண்டிலேட்டர்கள், முகக்கவசம் போன்ற பல பொருட்கள் ஏற்றுமதிக்கு பிப்ரவரி 25ன் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இதனால் ஏற்கனவே தொடர்ந்து நம்மிடம் வாங்கிக் கொண்டிருந்த, மேலும் வாங்க முன்பணம் கொடுத்துள்ள அமெரிக்காவுக்கு தட்டுப்பாடு ஏற்படவே அது தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

அதாவது இந்தியாவுடன் அமெரிக்கா சிறந்த நட்புடனே இருக்கிறது.எங்களுடனான  வர்த்தகத்தில் பொருளாதார பலனையும் பெற்றுள்ளது. தடை விதித்தால் விதிக்கட்டும், இதற்கான பதிலடி எதிர் காலத்தில் தரப்படும் என்றார் ட்ரம்ப் .

இது என்ன மிரட்டலா?. சாதாரண காலத்தில் என்றால் மிரட்டலாக எடுத்து கொள்ளலாம். இது அமெரிக்க கடுமையாக பாதிக்க பட்ட காலம், இந்தியா  தனக்கு பாதிப்பில்லாமல் உதவ வேண்டிய காலமும் கூட.

அப்படியே மிக பெரிய மிரட்டலாக வைத்துக் கொண்டாலும்  என்ன செய்துவிடும். இந்தியாவுக்கு ஏற்று மதி, இறக்குமதியில் தடை. இந்திய தொழிலாளருக்கு விசா தருவதில், தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை தருவதில் சிக்கல்  உருவாகும். இதையெல்லாம் சந்திக்காதவர் அல்ல மோடி. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரானுடன் வர்த்தகம் பூண்டவர். உண்மையிலேயே பற்றாக்குறை இருந்து  இந்தியா பணிந்திருந்தால் அது விமர்சனத்துக்கும்  உரியதே.

ஆனால் நிலைமையோ வேறு. இந்த மாத்திரையின்  உற்பத்தி திறனில் இந்தியாவின் பலம் மிக பெரியது. உலக தேவையில் 70%ம் உற்பத்தி இந்தியாவினுடையது. மாதத்துக்கு 20 கோடி மாத்திரை உற்பத்தி திறன் கொண்டது. இதில் இந்தியாவின் தேவையான 10 கோடி  மாத்திரையை பூர்த்தி செய்தது போக, அமெரிக்காவின் தற்போதைய தேவையான 2 கோடி மாத்திரையை ஏற்றுமதி செய்வதில் லாபம் தானே. ஒரு கொரோன நோயாளி சிகிச்சைக்கு 14 மாத்திரைகள் தேவை. அப்படி எனில் 70 லட்சம் மக்களுக்கான மாத்திரைகள் இந்தியாவிடம் உள்ளதே . தற்போதைக்கு  இந்தியாவில் சமூக தோற்று என்பது இல்லை, எனவே நோய் தோற்று சில ஆயிரங்கள் வரை செல்லலாம் அவ்வளவே.

எனவே  அமெரிக்க, இலங்கை உட்பட 20 நம்பகமான நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி தடையை தளர்த்திய இந்தியாவின் செயல் ,மனிதாபிமானம் மற்றும்  நல்ல வியாபாரம் அவ்வளவே.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.