வீரதீர செயல்கள் புரிந்த 25 குழந்தை களுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தேசிய வீரதீர விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


துன்பத்தில் சிக்கிய மனிதர்களை காப்பாற்றி சாகசம் புரிந்த அந்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் பிரதமர்  பாராட்டியுள்ளார்.

மேலும் அதில் ‘‘சமயோஜித அறிவாற்றல், விரைவாக சிந்திக்கும்திறன், தன்னலமற்ற தொண்டுணர்வு மற்றும் துன்பத்தில் இருப்போரை காப்பாற்றும் மனோ திடம் ஆகிய முக்கியமான நல்குணங்கள் வீரதீர செயல்கள் புரிந்த இந்த குழந்தைகளிடம் காண்கிறேன். இத்தகைய வீரதீர செயல்கள் விருதுகள் பெற்றவுடனேயே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதும் இதை கடைபிடிக்க வேண்டும். சமுதாயத்துக்கான தொண்டுப் பணியை தொடர்ச்சியாக செய்து தங்களது நல்லகுணங்களை குழந்தைகள் மென் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறி வுறுத்தினார்’’

Leave a Reply