அசாம் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் மிகமோசமான நிலையில் நடைபெற்று வரும் கலவரத்துக்கு முக்கிய காரணமே எந்த வித சோதனையும் இல்லாமல் சட்ட விரோதமாக இந்த மாநிலத்திற்குள் குடிபுகுந்த பங்களாதேஷிகளே காரணம் என பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது
இந்த கலவரத்திற்க்கான காரணம் அறிய பா.ஜ.க வின் விஜய் கோயல் தலைமையில் குழு அமைக்கபட்டது. இந்தகுழு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிபார்த்தது. பிறகு மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் மிகமோசமாக நடைபெற்ற இந்த கலவரத்துக்கு முக்கிய காரணமே எந்த வித சோதனையும் இல்லாமல் சட்ட விரோதமாக குடிபுகுந்தவர்களே காரணம் என அந்தகமிட்டி குறை கூறியுள்ளது.
இந்திய பங்களாதேஷ் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு தடுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. இந்தநிலையில் அசாமிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியர்கள் வன் முறையை கையிலெடுத்து கொண்டு இந்தியாவின் பழங்குடியின மக்களான போடோ மக்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கட்டுபடுத்த வேண்டும் என பா.ஜ.க தலைவர் ஆனந்த் குமார் கேட்டுகொண்டுள்ளார்.
வன்முறையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த வன் முறைக்கான காரணங்களை அங்கு ஆளும் மதசார்பற்ற காங்கிரஸ் அரசு கண்டுபிடித்துவிட்டதா சட்ட விரோதமாக அங்கு குடியேறியவர்களுக்கும் போடோ பழங்குடியின மக்களுக்குமிடையே நடக்கும் இந்தவன்முறைக்கு இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர் . மேலும் 5 லட்ச பேர் வன்முறையால் இடம் பெயர்ந்துள்ளனர் பங்களாதேஷிலிருந்து அசாமிற்குள் இடம்பெயர்ந்து குடியேறியுள்ளவர்களால் மாறிய முரண் பாடான பழக்க வழக்கங்களால் தான் இந்தவன்முறை நடந்துள்ளது இநநிலையில் அரசு இதை மிக் குறைவாக சொல்லி வருகிறது என்று அந்த கமிட்டியின் உறுப்பினர் ரூடி தெரிவித்துள்ளார்.