இப்படி நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் மக்களுக்கு தெரிவித்த நப்பிக்கை தகர்ந்தது எப்படி?

இதற்க்கு நாம் கொஞ்சம் வரலாற்றுக்குள் திரும்பி போக வேண்டும்.போவோம் கி.மு.327 க்கு….

நமது நாட்டின் மீது முதல் படையெடுப்பை நடத்தியவன்

அலெக்சாண்டர்.ஆண்டு கி.மு.327.சரியாக மூன்றே ஆண்டுகளில் மாபெரும் தோல்வியுற்று தன் தேசம் திரும்பினான்.அதன் பிறகு இந்தியாவை ஆண்ட சந்திரகுப்தர்,சாணக்கியர்ரின் சாதுர்யத்தால் அடுத்த ஆறு வருடங்களிலேயே அயல்தேச மன்னன் ஒருவன் நம்மை ஆண்டான் என்பதற்க்கான அடிசுவடே இல்லாமல் செய்தார்கள்.காரணம் நமது தேசிய சக்தி பலம்மாக இருந்ததால்..

பிறகு கி.பி.முதலாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து கூட்டம் கூட்டம்மாக குஷாணர்கள் படையெடுத்து வந்தார்கள்.நமது சக்தி வாய்ந்த தேசிய பலத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். குஷாணர்களின் புகழ்பெற்ற அரசன் கணிஷ்கர் புத்தமத்த்தை தழுவி உலகமெங்கும் புத்தத்தை பரப்பி இரண்டாம் அசோகர் என பெயர் பெற்றான்.

பிறகு.சகரர்கள்,ஸ்வீனர்கள், படையெடுத்து வந்தார்கள்.அவர்கள் அனைவரும் நமது பாரம்பர்ய பலத்தால்,நம் பண்பாட்டால் நம்மவர் ஆனார்கள்.நமது கலாச்சாரத்தோடும்,பண்பாடோடும் அவர்கள் இரண்டற கலந்து விட்டார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் முஸ்லீம்களின் படையெடுப்பு.11 ம் நூற்றாண்டில் கஜினி முகமது,13ம் நூற்றாண்டு முகமது கோரி பிறகு கொள்ளை நோய் போல துருக்கியர்கள், அராபியர்கள், முகலாயர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் என தொடர்ந்து நம் மீது படையெடுத்தார்கள்.

நமது தேசத்தின் பலம் வாய்ந்த மன்னர்கள் ராஜாபிதாபசிம்மன்,சத்ரபதி சிவாஜி,குருகோவிந்தசிம்மன்,கிருஷ்ணதேவராயர் ஆகியோரின் தலைமையில் சாதுர்யத்தில் முகலாயப்படையை எதிர்த்து நமது தேசம் போராடியது.அது மட்டும்மின்றி முகலாய ஆட்சிக்கு முற்றுபுள்ளியும் வைத்தது.எவ்வித எதிர்புமின்றி ஏழுகடல் கடந்து வந்த அவர்தம் சேனையும் ஆட்சியும் நமது கங்கையில் ஜலசமாதி செய்யப்பட்டார்கள்.

நமது வரலாற்றின் வெற்றி,தோல்வியிலிருந்து சில ப்டிப்பினை பெற்று நாம் புத்துணர்ச்சி பெறும் முன்பே நரித்தனமும், நயவஞ்சகமும் தன்னகதே கொண்ட ஆங்கிலேயன் நம் நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்தார்ன்.பிரிவினைக்கு வித்திட்டார்கள். சூழ்சியை ஏவினார்கள் கலாசாரத்தையும்,பண்பாட்டையும் சீரழித்தார்கள்..பாரத்த்தை துண்டாட வித்திட்டான்.பாரதம் பிரிந்த இந்த கபட நாடகத்துக்கு மூன்று பேர் சூத்திரதாரிகள் ஆனார்கள்.

1..ஆங்கிலேயர்கள்..
2.காங்கிரஸ்காரர்கள்..
3..இஸ்லாமியர்கள்.

தேசப்பிரிவினை என்னும் சோக வரலாற்றின் பிண்ணனியாளர்கள் இவர்கள்தான்.எப்படி

தொடரும்,,,,,,,,,,,,

நன்றி  தங்கராஜ்

Tags:

Leave a Reply