அதிபர் ஒபாமாவுகு நேற்று இரவு ஒபாமா தம்பதியருக்கு  ஜனாதிபதி மாளிகையில் பிரதிபாபட்டீல் விருந்து கொடுத்தார். இந்த விருந்து ஒபாமா தம்பதியரை திக்கு-முக்காட செய்துவிட்டது.

ஜனாதிபதி மாளிகையின் முகல் கார்டன்புல் வெளித்தோட்டத்தில் நேற்றி ரவு நடந்த விருந்து ஏற்பாடுகள் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தன. விருந்துக்கு ஒபாமா தம்பதியர் வரும் வழி எங்கும்  ரங்கோலி கோலம் போட பட்டிருந்தது.

இந்தியாவின் எல்லா புகழ் பெற்ற உணவு வகைகளும்  விருந்தில் இடம் பெற்றிருந்தன ஒவ்வொரு வகை உணவிலும் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்தன.

விருந்தில் மீன் டிக்கா,காய்கறி சூப், கீரை, அன்னாசிப்பழம் அல்வா, பருப்பு, சிக்கன் கபாப்,  ரொட்டி, பரோட்டா, நான் வகைகள், சாலட், சென்னா, புலவ் வகைகள், மூலிகை டீ, தமிழ்நாட்டு காபி உள்பட பல உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. இந்த உணவுகளை ரசித்து, ருசித்து சாப்பிட்ட ஒபாமா தம்பதியினர் அன்னாசிபழம் அல்வாவை வெகுவாக புகழ்ந்தனர்.

Leave a Reply