முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியினால் தான் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்ததாக அந்த கட்சியின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடபட்ட புத்தக்த்தில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ்ன் நூற்றாண்டு வரலாற்று-புத்தகத்தின் 5வது பதிப்பை நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையிலான குழு-தயாரித்தது.

இந்த புத்தகத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் பல்வேறு அரசியல் நோக்கர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது இதில் 1964ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு-வரையிலான காங்கிரஸ் கட்சியினுடைய வரலாறு பல்வேறு கோணத்தில் ஆராயபட்டுள்ளது. குறிப்பாக இந்திரா காந்தயின் செயல்பாடு குறித்தும் அலசி ஆராயப்பட்டுள்ளது.

1980-களில் இந்திராகாந்தி காங்கிரஸை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எடுத்த சிலநடவடிக்கைகள் உள்கட்சி ஜனநாயகத்தை-பாதித்தது. அதனால்தான் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் காங்கிரஸ்ன் வாக்கு-வங்கி பெரிதும் சரிந்தது. அந்த பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டபாடில்லை என அதில் குறிப்பிடபட்டுள்ளது.

நேரு ஆட்சி காலத்தின் பொது சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தந்தனர். ஆனால் 1977ம் ஆண்டு அவசர-நிலை பிரகடனத்திற்கு பிறகு நிலைமை தலை கீழாகிவிட்டது.

அவசர நிலைக்கு முன்பு காங்கிரஸ்சுக்கு ஆதரவளித்த தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அதன் பின்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி,பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு தர ஆரம்பித்துவிட்டனர் என புத்தக்த்தில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்திராகாந்தி, இந்திராகாந்தியின், இந்திராகாந்தியை, இந்திரா காந்தியைக், இந்திரா காந்தி சமாதி, இந்திரா காந்தியால், அவசர நிலை பிரகடனம்,

Leave a Reply