ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வான ஹசன்அலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்’ என்று , இந்து முன்னணி சார்பாக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சட்டபை தொகுதியின் காங்கிரஸ் ., கட்சியின் எம்.எல்.ஏ வான ஹசன்அலி தொகுதிக்கு வருவதில்லை’ என்று பொதுமக்களின் குற்றச்சாட்டும், “நான் தவறாமல் வந்து செல்கிறேன் ‘ என்ற, எம்.எல்.ஏவின்

பதிலும் வழக்கமான ஒன்று.

இந்நிலையில் , இந்து முன்னணி சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரில், “ராமநாதபுரம் தொகுதி-மக்களுக்கு தொண்டாற்றுவதாக கூறி ஓட்டு-வாங்கிய ஹசன்அலி எம்.எல்.ஏவைக் காணவில்லை. கள்ள தோணியில் இலங்கை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது; கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்கசன்மானம் வழங்கப்படும்’ என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஹசன்அலி சார்பாக போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply