“மோடிக்கு மிக சிறந்த ராஜ தந்திரத்தை யாரோ வகுத்து கொடுக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது, மோடிஜி அட்டகாசமான ராஜ தந்திர வியூகத்தில் பின்னுகின்றார்.

பாரீஸ்செல்லும் வழியில் அபுதாபிக்கு சென்றார், அங்கு அவருக்கு அந்நாட்டின் உயரியவிருது முன்பு அறிவிக்கபடி வழங்கபட்டது.அப்பொழுதுதான் தேர்ந்த ராஜதந்திரத்தை காட்டியிருக்கின்றார் மோடி.

அபுதாபி சுல்தான்களும் அரபு சுல்தான்களும் கோணிப்பை நிறைய பணத்தை கட்டிகொண்டு அந்த விமானம் என்ன விலை? இந்த அரண்மனை என்ன விலை? என கேட்பதோடு மட்டுமல்லாமல் உலகெல்லாம் முதலீடு செய்யவதில் ஆர்வமுள்ள்ளவர்கள்.

கடலடி திமிங்கலங்கள் மீதும் பணம் கட்ட அவர்கள் ரெடி, வந்தால் பணம் போனால் என்ன ?….இருக்கவே இருக்கின்றது எண்ணெய் கிணறுகள்.வற்றாத செல்வம் வழங்கும் பண ஊற்றுகள்.

அந்த அரபு சுல்தான்களிடம் நீங்கள் ஏன் காஷ்மீரில் முதலீடு செய்ய கூடாது, தடையாக இருந்த சட்டங்களை எல்லாம் நாம் விலக்கிவிட்டோமே என வலிய கேட்டிருக்கின்றார்.

காஷ்மீர் இஸ்லாமியர் மாநிலம், இஸ்லாமிய சுல்தான்கள் வந்தால் அங்கு நிச்சயம் சிக்கல் ஏதுமில்லை.

அரபு சுல்தான்கள் கால் வைத்த இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சல்யூட் அடித்து காவல் இருப்பார்கள் என்பது இன்னொரு விஷயம்.

ஆக, எந்த இஸ்லாமிய சகோதரத்துவத்தை கொண்டு காஷ்மீரில் பாகிஸ்தான் கண்ணாமுச்சி காட்டியதோ, அதே இஸ்லாமிய சகோதரத்துவத்தை தனக்கு கட்டுபட்ட காஷ்மீரில் காட்டி பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுகின்றது இந்தியா.

நிச்சயம், வைரத்தை வைரத்தாலே அறுக்கும் அருமையான ராஜதந்திரம் இது.

காஷ்மீரில் அழகும் செழுமையும் வனப்பும் இருக்கின்றது, ஆனால் பணமில்லை.

அரபு சுல்தான்களிடம் பணம் உண்டு ஆனால் பாலைவனம் தவிர ஏதுமில்லை.

ஆக இனி சுவிஸ், ஆல்ப்ஸ் என செல்லும் சுல்தான்கள் காஷ்மீருக்குள் வரலாம், பாகிஸ்தானும் சலாம் அலைக்கும் என சொல்லிவிட்டு அமைதியாகலாம்.

நாம் ஜனகராஜ் பாணியில் மோடியினை வாழ்த்தலாம்

Comments are closed.