கேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள்.

  மணிகண்டன் மன்னரை பம்பா நதியின் வடக்கே சபரிமலையில் ஆலயம் கட்டுமாறும் தான் அங்கெழுந்தருளப் போவதாகவும் கேட்டுக் கொண்டான். மன்னரும் அப்படியே சபரிமலையில் ஆலயம் அமைத்தார்.அங்கு ஆலயத்தில் அய்யப்பனை”நைஷ்டிக் பிரம்மச்சரியாக”(Naishtik Brahmachari) பிரதிஷ்டை செய்தார்கள்

  நைஷ்டிக் பிரம்மச்சரி என்பவன் யார்? என்று நாரதர் துரவாச முனிவரிடம் கேட்டார்.அதற்கு அவர். நைஷ்டிக் பிரம்மச்சரியம் எனபது இக,பர சுகங்களை தவிர்த்து நித்ய பிரம்மசாரியாக விரதம் பூண்டு மக்களுக்கு அருளாசி வழங்குபவன்.அவனிடம் பெண்கள் அணுக முடியாது.அணுகக் கூடாது.

ஆகவேதான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரி மலையில்   அனுமதிப்பதில்லை.அது இந்து மதம் சார்ந்த கோட்பாடு.

   இங்கு வரும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் மேற்கொண்டு உணவுக் கட்டுப்பாடு,உடல் கட்டுப்பாட்டுடன் இருந்து அய்யப்பனை ஆலயம் வந்து வழிபடுகிறார்கள்.அந்த 41 நாட்களும் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி இருப்பார்கள்.

    திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களை  பற்றி சர்வே அறிக்கை தயாரித்த ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் சபரிமலையைப் பற்றி,

“…old woman and young girls,may approach the temple,who have attained puberty and to a certain time of life are forbid to approach,as all sexual intercourse in that vicinity is averse to this deity….”(Memoir of the Travancore and Cochin States-by Lieutenants WardandConner). அவ்வறிக்கை 1893 லும் பின்னர் கேரள அரசால் 1994 லும் வெளியிடப்பட்டது.

  ஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு தெரியவில்லை என்பதுதான்  வேதனை.

   நௌசாத் அகமது கான்  என்பவர் தலைவராக உள்ள ஒரு இந்திய இளம் வழக்கறிஞர் சங்கம் சபரிமலையில் 10 வயதுக்கு மேற்பட்டு 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்ட  விதிகளுக்கு புறம்பானது என கேரள அரசு வகையரா மீது இந்திய உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு எண்:373/2006 தாக்கல் செய்தனர்.அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைமை நீதிபதி திரு.தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரித்தது.நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,A.M.கனவல்கர், R.F.நாரிமன், தனஞ்சய சந்திர சூட்,ஆகியோர் மனுதாரருக்கு ஆதரவாகவும் நீதிபதி இந்து மல்கோத்ரா எதிராகவும் 28.9.18 அன்று தீர்ப்பு வழங்கினார்கள்.

  இந்தியாவில் 1000 த்திற்கு மேற்பட்ட அய்யப்பன் ஆலயங்கள் உள்ளது.அங்கு எந்த வயது பெண்கள் வேண்டுமானாலும் செல்லலாம் தரசிக்கலாம்.சபரிமலை அய்யப்பன் ஆலயத்தில்  அய்யப்பன் நைஸ்டீக் பிரம்மச்சரி .இங்கு எல்லா பெண்களும் வர முடியாது என்பதை நீதிபதி இந்து  மல்கோத்ரா சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் ஆலய வழிபாட்டு முறைகளை மதம் சார்ந்தவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.  இந்நடைமுறைகள் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு ஏற்படுத்தப் பட்டவைகள். அப்படியிருக்க அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு புறம்பானதென்று எப்படி சொல்லமுடியும்?.

 மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள திரியம்ப கேஷ்வர் ஆலயத்தில் பெண்களுக்கு அனுமதியில்லை.2016 ஏப்ரல் மாதம் மும்பை உயர்நீதிமன்றம் பெண்களை அனுமதிக்கவேண்டு மென ஆணை பிறப்பித்தது ஆனால் கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை . அதே போல் டெல்லியில் உள்ள 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான நிஷாமுதின் தர்காவில் பெண்கள் உள்ளே சென்று சமாதிக்கு மலர் தூவ முடியாது.ஹரியானா மாநிலம் பெகாவாவில் உள்ள கார்த்திகேயா ஆலயத்திற்கு பெண்கள் செல்லமுடியாது.ராஜஸ்தான் மாநிலம் ராடகபூர் ஆலயத்தில் மாதவிடாய் பெண்கள் செல்லமுடியாது.

     மதச்சார்பற்ற நாடு என்று சொல்லும் நாம் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது வேதனைக்குறியது. கடந்த 35 ஆண்டுகளாக அய்யப்பன் ஆலயம் செல்பவன் என்ற முறையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து மிகுந்த வேதனை யுறுகிறேன்.ஓம் சாமியே சரணம் அய்யப்பா!.

Dr.S.K.காரவேந்தன் Ex.MP

Leave a Reply