ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் மொத்த சொத்துமதிப்பு ஆவணங்களின்படி ரூ. 440 கோடியாக இருந்த போதிலும் , அவரது உண்மையான சொத்துமதிப்பு ரூ.16.96 லட்சம் கோடி என தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த தாதி வீரபத்திர ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது : ஜெகன் மற்றும் அவரது பினாமிகளின் பெயரில் உள்ள நிலம் , சுரங்கங்களின் மதிப்பை கணக்கிட்டால் ரூ.16.96 லட்சம்கோடி அளவுக்கு இருக்கும். அவர் தனதுசொத்துகளை அரசிடம் ஒப்படைத்து விட்டு, மக்களிடம் செல்லவேண்டும். அவரது சொத்துக்களை காங்கிரஸ் அரசு உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்றார் வீரபத்திர ராவ்.

Tags:

Leave a Reply