ஸ்ரீ ராமன் தனது அவதார காலத்தை பூர்த்தி செய்து கொண்டு வைகுண்டம் செல்ல திட்டமிட்டார், அதே நேரத்தில் தன்னுடன் இருக்கும் சகல ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார் ஆஞ்சநேயரையும் அழைத்து தன்னுடன் நீயும் வா என்று அன்புடன் அழைத்தார் .

அனுமான் "முடியாது….. முடியாது…. முடியாது…… என்று மூன்று முறை கூறினார் பிறகு அதற்க்கான் காரணத்தையும் தெரிவித்தார் .

பிரபோ நான் வருவதென்றால் இந்த உடலையும் நீத்தல்லவா வரவேண்டும் என் உடலை விடுவதற்க்கில்லையே , உன்னால் ஆலிங்கனம் பெற்றது அல்லவே என் மேனி , இதை நான் எங்கனம் நீங்குவேன்.

தவிர உன் வரலாற்று பெட்டகமான ஸ்ரீமத் ராமாயணத்தை அங்கே கேட்க்க முடியாதே
உன்னையும் அங்கே சேவிக்க முடியாதே , நீ ராமனாக அங்கே இருக்க மாட்டாயே .

அங்கு சாமகானம் உண்டே தவிர ராமநாம கானம் உண்டா? என்று சொன்னாராம் .

எனவேதான் ஸ்ரீராமாயணம் சொற்ப்பொழிவு நடக்கும் இடங்களிலும் பாராயணம் செய்யும் இடங்களிலும் சிரசின் மேல் இரு கைகளையும் குவித்து அஞ்சலி செய்த வண்ணம் ராமன் முன்பாக அமர்ந்து தியானத்தில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு தனி ஸ்தானம்கொடுத்து பாராயணம் செய்வார்கள்.

ஆஞ்சநேயரையும், அனுமான் , ஆஞ்சநேயர், ஆஞ்சநேயன், ஆஞ்சனேயர், ஆஞ்சநேயரை

Leave a Reply