நாடாளுமன்றம் ஒழுங்காக நடை பெற மக்களாட்சிக்கு தலைவணங்கி பணியில் ஈடுபடுவோம் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் .

2ஜி விவகாரத்தில், பாராளுமன்ற கூட்டு குழு அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி குறி பேசியபோது இந்த அறிவிப்பை-வெளியிட்டார். பாராளுமன்ற கூட்டுகுழு அமைப்பதக்கு சபாநாயகருக்கு அவர்

வேண்டுகோள் விடுத்த , மேலும் பட்ஜெட் கூட்ட தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற கூட்டு குழு அமைக்கப்படுவதற்கு பா.ஜ க உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், தீர்வு தாமதமாக ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மக்களவைத் தலைவர்,சபாநாயகர், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் ஆகியோருக்கும் நன்றி. இதில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை எண்ணாமல் மக்கள்பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றம் நடை பெற மக்களாட்சிக்கு தலைவணங்கி பணியில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply