கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். திருப்பூர்மண்ணிற்கு தலை வணங்குகிறேன். ஏனென்றால் திருப்பூர் குமரன் உள்ளிட்டோரின் துணிச்சலுக்கான மண்.

தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் சின்ன மலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது.

மீண்டும் நமோ என்ற தாங்கிவரும் டி-ஷர்ட் திருப்பூரில் இருந்துதான் வருகிறது.

பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்தநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்க அரசு ஈடுபட்டிருகிறது.

தொழிலாளர்கள் நலன் திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வழங்கப்படும்.

கடல் முதல் வானம்வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைதுசெய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒருதலைவரோடு தொடர்புள்ளவர்கள்.

2 பாதுகாப்பு பூங்காங்கள் அமைக்கப் படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய  விருக்கின்றன.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்ய வில்லை. துல்லியத் தாக்குதலையும் எதிர்க் கட்சிகள் கொச்சைப் படுத்தி பேசினர்.

இடைத்தரகளை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்துவந்தது. ராணுவத்தை இழிவுபடுத்து வதற்காக, சிறுமைப்படுத்து வதற்காக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவுபெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்த வில்லை.

சாகார் மாலா திட்டத்தின் மூலம் கடலோர பகுதிகளில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1.3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப் பட்டுள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றிருக் கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறும் வகையில் 5 லட்சம்வரை வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். பாஜக அரசின் நலப் பணிகள் சிலரை சந்தோஷ குறைவாக மாற்றி இருக்கிறது.

அரசாங்கத்தின் செயல் பாடுகளை பார்த்து சிலர் வருத்தப் பட்டனர். தற்போது விரக்தியடைந் திருக்கின்றனர். மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை போன்று தான் இருக்க வேண்டும் என காமராஜர் விரும்பினார். ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக அரசு பூட்டுப் போட்டிருக்கிறது.

திருப்பூரில் பெருமாநல்லூரில் நடைபெற்ற பாரதீய ஜனதா பொதுக்கூட்டதில் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply