சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது திருக்காரணீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய_தலம் இது. பழம்பெருமை கொண்ட தலங்களுள் ஒன்றான திரக்காரணீச்சுரத்தில் "திருக்காரணீஸ்வரர்" தாயார்_சொர்ணாம்பிகையோடு காட்சிதருகிறார்.

ஒரு முறை வசிஷ்ய முனிவர் யாகம் ஒன்றை செய்ய இருந்தார், பெரிய யாகம் என்பதால் அந்த யாகத்துக்கு பல பொருட்ககள் தேவைப்பட்டது , பொருட்ககளை வாங்க வேண்டும் என்பதினாலும் யாகம் தடங்கல் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும் கேட்டதை அடுத்த கணமே தரும் காமதேனுப் பசுவை சில நாட்கள் தமக்கு இரவலாக தந்து உதவவேண்டும் என்று தேவேந்திரனான இந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தார், தேவேந்திரனும் அதற்க்கு சம்மதித்து தனது காமதேனு பசுவை அவருக்கு சில நாட்களுக்கு தந்தார்.

அந்த பசுவும் வஷிஷ்டரிடம் இருந்தது அவருக்கு தேவையானதை தந்து வந்தது . ஒரு நாள் அந்தப் பசு யாகம் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இடையூறு செய்ய, கோபமடைந்த வசிஷ்டர் அந்த காமதேனுப் பசுவை காட்டில் திரிந்து அலையும் காட்டுப் பசுவாக மாறித் திரியுமாறு சாபமிட்டார். ஆகவே அதுவும் காட்டில் சென்று காட்டுப் பசுவாக மாறி சுற்றி அலைந்தது.

இதை அறிந்த தேவேந்திரன் வருத்தம் அடைந்தான் . தேவேந்திரனால் வசிஷ்டரை எதிர்க்க முடியாது. எனவே அவரிடமே சென்று சாப விமோசனம் பெற்று அதை திரும்பப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார் , தன் கோபத்தை நினைத்து வருந்திய வஷிஷ்ட முனிவரும், தான் இட்ட சாபத்தை திரும்பப் பெறும் சக்தி தமக்கே இல்லை என்பதினால் அவரும் தொண்டை மானிலத்தில் (தற்பொழுது ஆலயம் உள்ள இடம்) ஒரு சோலையை அமைத்து, அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால் சிவபெருமானின் அருளினால் சாபம் விலகி காமதேனு அவருக்கு மீண்டும் கிடைக்கும் என அறிவுறைத் தந்தார்.

அதைக் கேட்ட தேவேந்திரனும் உடனேயே அங்கு சென்று தனது வாகனமான கார் மேகங்களை அனுப்பி அந்த பகுதியை மழையால் குளிர்வித்தான். அந்தபிரதேசமே சோலைவனமாக காடசிதன்தது. தானும் அங்குசென்று தடாகம் ஒன்றை உருவாக்கி அச்சோலைக்குள் லிங்கம்_ஒன்றையும் பிரதிஷ்டைசெய்து பூஜித்து வந்தான் .

சிலகாலம் பொறுத்து அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன் காட்சி அனித்து அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க தேவேந்திரன் தமக்கு காமதேனுப் பசுவை திரும்ப கிடைக்க அருளுமாறு கேட்டார். சிவபெருமானும் மகிழ்ச்சி அடைந்து காமதேனுவை மீண்டும் அவருக்குக் கிடைக்க வழி செய்தார். சோலை வளர்த்து மழை பொழிவித்து அந்த இடம் குளுமையாக இருந்ததினால் அதை காரணி அதாவது குளுமை என அழைத்து, அங்கு ஈஸ்வரரை வழிபட்டதினால் காரணீ ஈஸ்வரர் என்ற பெயரில் ஆலயம் அமைய நாளடைவில் அது மருவி திருக்காரணீஸ்வரர் என ஆயிற்று. ஆலயம் சுமார் 800 வருடத்திற்கு முற்பட்டது.

திருக்காரணீஸ்வரர்.  சென்னை சைதாப்பேட்டை, காரணீஸ்வரர்  சென்னை. சைதாப்பேட்டை

Leave a Reply