சென்னையை சுற்றி பல மகான்கள் சமாதி அடைந்த இடங்கள் உள்ளன. இப்படியாக சுமார் 50 அல்லது அறுபது சமாதிகள் சென்னையில் இருக்கலாம். அவை ஒவ்ஒன்றும் ஒவ்ஒரு விதத்தில் பிரசித்தி பெற்றவை. சமாதிகள் உள்ள இடங்களில் செல்லும்போது அங்கு அந்த மகான்களின் சக்தியினால் எழுப்பும் அதிர்வு அலைகள் உண்மையான பக்தி கொண்டு அங்கு

சென்று துதிக்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் செய்யும் என்பதே நமது புராதான நம்பிக்கை. அப்படிப்பட்ட ஜீவ சமாதிகளில் ஒன்றான சென்னை காரணீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் நுர்று மீட்டர் தொலைவில் உள்ள "குருலிங்க ஸ்வாமிகள் சமாதி" புகழ் பெற்றது.

ஸ்வாமிகளைப் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை என்றாலும் அவர் விருத்தாசலத்தில் பிறந்தவர் எனவும் அவருடைய இடது கையில் சிவலிங்கம் தோன்றியது என்ற செய்திகளும் உள்ளன. அவர் பெரும் சிவபக்தர். ஆகவே பல இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கும் சென்று சுற்றித் திரிந்தவர் இறுதியாக  காரணீஸ்வரர் ஆலயத்தில் வந்து அவரை பூஜித்தபடி இருந்தார்.

அவர் எங்கிருந்து வந்தார் என்ற முழு விவரமும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் காரணீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து ஆலயத்துக்கு உள்ளேயே சமாதி அடைய விரும்பினார். ஆனால் அதை ஆலயப் பண்டிதார் அனுமதிக்கவில்லை. ஆகவே ஸ்வாமிகள் அருகில் இருந்த தெப்பக் குளத்தருகே சென்று அமர்ந்து கொண்டாராம்.

அன்று இரவு அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுத்தப் பண்டிதருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டார். அவருக்கு அந்த ஸ்வாமிகளை தான் அனுமதிக்க மறுத்த சம்பவம் நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம் சென்று அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். ஸ்வாமிகள் வீபுதி தர அதை தண்ணீரில் கலந்து குடிக்க உபாதை நின்றது. அதன் பின் ஸ்வாமிகள் ஒரு இடத்தைக் காட்டி அங்கு தான் சமாதி அடைய விரும்புவதாகக் கூறினார். 13.12.1886 அன்று தான் சமாதி அடைய இருப்பதாக முன்கூட்டியே அறிவித்தப் பின் அதுபோலவே சமாதியும் அடைந்தார்.

அவர் மீது சமாதி எழுப்பி அதன் மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து உள்ளனர். அவருக்கு பிரதோஷ தினங்களில் பூஜைகள் செய்கின்றனர். வரடாந்திர விழாவும் நடைபெறுகிறது. அவர் பலருக்கும் தீராத நோய்களை குணப்படுத்தியும், பல விதங்களில் தமது சக்தியையும் காட்டி உள்ளார். அவர் சூட்ஷம ரூபத்தில் இருந்தவாறு தன் சமாதிக்கு வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Tags; ஜீவ சமாதி , ஜீவ ஊற்று, சென்னை, மகான்களின், சக்தி, குருலிங்க ஸ்வாமிகள், சமாதி,

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply