சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க. எதிர்ப்பது வாஜ்பாய்க்கு செய்யும் துரோகம் என்கிறாரே தி.மு.க தலைவர் கருணாநிதி?சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க. எதிர்ப்பது வாஜ்பாய்க்கு செய்யும் துரோகம் என்கிறாரே தி.மு.க தலைவர் கருணாநிதி?

ரமேஷ் சென்னை

தவறான தகவல் . வாஜ்பாய் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இரண்டு வழித்தடங்கள் யோசிக்கப்பட்டன . நமது ஆட்சியில் முதன்முதலாக சேது சமுத்ர திட்டத்தை அமுல் படுத்த கொள்கை ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. 1998 ல் சென்னையில் வாஜ்பாய் அறிவித்தார்.

நமது ஆட்சி அமைத்த குழு மூன்றாவது வழித்தடத்தை பரிந்துரைத்தது . அது கோதண்டராமர் கோவிலை பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்தோம் .கோதண்டராமர் கோவில் என்பது விபீஷண பட்டாபிஷேகம் நடைபெற்ற இடம் என்பதால் எதிர்ப்பு. 21.9 2003 ல் கடைசீயாக குழு ராமேஸ்வரம் வந்தது. எவருக்கும் பாதிப்பில்லாத் நன்காவது வழித்தடத்தை ஏற்பதாக அரசு 23 9 2003 ல் அறிவித்தது. 21.5. 2004 ல் ஆட்சி மாறியது ஜூன் 2004 முதல் தேதி TR பாலு கப்பல் துறை மந்திரியானார்

ஆகஸ்ட் 24 2004 முதல் முறை பாலு ராமநாதபுரம் வந்தார் ஊர் பொதுமக்கள் பிரமுகர்கள் கூட்டத்தில் புதிய வழித்தடத்தை அறிவித்தார் அந்தகூட்டதிலேயே ஒருவர் “இந்த புதிய வழித்தடம் அமுலானால் சேது பாலம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தார். அவர் rss பரிவாரை சேர்ந்தவர். அவர் பெயர் கருணாநிதி. நம்ம கருணாநிதி

நன்றி இல.கணேசன் ஜி
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

நண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com

Leave a Reply