நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதை எப்பாடுபட்டாவது தடுப்பேன் என்கிறாரே லாலுபிரசாத் யாதவ்?

அருன்பிரபு, ராஜபாளையம்

லல்லுவுக்கு பீகாரிலே செல்வாக்கு குறைந்து விட்டது. ஆனால் இணைய தளம் மூலமாக மோதிக்கு ஆதரவு தருபவர்கள் பெரும்பான்மையினர் தென் மாநிலத்தவர். எனவே லல்லு பேச்சு பெட்டை ப புலம்பல்

பாதுகாப்புதுறை அமைச்சர் அவர்கள் தமிழ் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கவில்லை ஆனால் வெளி இடத்தில் பயிற்சி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளாரே ! அதைபற்றி தாங்களின் கருத்து ?

எஸ்.மகாதேவன்,வேளாங்கண்ணி ,நாகை

இது அபத்தமான பேச்சு ;ஆபத்தான பேச்சு .காலிலே புண்வந்து வலி வந்தால் இந்த வலி காலுக்கு மட்டும்தான் என தேகம் நினைக்குமா? இலங்கைத் தமிழர் நிலை குறித்து தமிழக மக்கள் பிரச்சினை என நினைக்கவில்லை .அதனால் தமிழ்நாட்டுக்கு வெளியே நடத்துகிறேன் என்றால் என்ன பொருள்? கால் வேறு என உடல் நினைக்கிறது என்று பொருள் .இது அபத்தமானது .

இலங்கை வீரர்களுக்கு ஆயுதம் ,பயிற்சி ,நிதி ,ஆகியவை தந்தால் அவை யாருக்கு எதிராக பயன்படுகிறது ?எதிரி நாடு என்று எதாவது உள்ளதா ? அவை தமிழருக்கு எதிராகவே பயன்படும் .

நமது மூத்தத் தலைவர் எல் .கே .அத்வானி , பாகிஸ்தானில் ஹிந்துக்கள் படும் வேதனையை பேசியதற்கு இந்திய கிறிஸ்துக காங்கிரஸ் (I .C .C )பெ .செ .ஷகீல் அகம்மது என்ற முஸ்லிம் அத்வானி ஜி.,யை பாகிஸ்தானுக்கு போக சொல்லியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?

ப .நா .ஹரிதாசன் ,நாகை .

பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களுக்கு உரிய பாதுகாப்பினைத் தாருங்கள் என வலியுறுத்த  மத்திய அரசின் சார்பாக அத்வானி அவர்கள் அதிகார பூர்வமாக பாகிஸ்தானுக்கு செல்லும் காலம் விரைவில் வரும் .ஆனால் ஷகீல் அகமது எந்த முறையில் பாகிஸ்தான் சென்றாலும் அந்த நாடு அவரை ஏற்காது .மரியாதையாக இந்திய நாட்டு உப்பை தின்றவர் இந்திய நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதே அவருக்கு நல்லது

நன்றி இல.கணேசன் ஜி
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

நண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com

Leave a Reply