காங்கிரசில் எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். எனவே அவர்கள் உறவை நான் துண்டிக்க முடியாது , இந்த உறவை யாராலும் தடுக்க முடியாது. என்கிறாரே அழகிரி.

சிவராஜன்

எல்லா அரசியல் தலைவர்களுக்கும் பிற கட்சி தலைவர்களோடு நட்பு இருக்கும் என்பது உண்மை .சிலருக்கு தன்னை காத்துக்கொள்ள அந்த நட்பு பயன்படும் என்பதும் உண்மை

இளம் வயதில் குற்றம் செய்தாரே தவிர, சஞ்சய் தத் ஒன்றும், பயங்கரவாதி அல்ல என, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகிறாரே?.

செந்தில், நாகர்கோவில்

 பிரபலமான அனைவரும் 100% நல்லவர்கள் என சொல்ல முடியாது. ஆனாலும் மிகை நாடி குணத்தை மாத்திரம் ஏற்பது இயல்பு. ஆனால் தேச விரோத செயலுக்கு இரக்கமே காட்டக்கூடாது. திக்விஜய் ஒரு உள ரு வாயர்

காங்கிரஸ், மகாத்மா காந்தி , நேருவின் கொள்கைகளை பின்பற்றுகிறது.என்கிறாரே திக்விஜய் சிங்?

லதாகுமாரி

நேருவின் என்றால் சரி. நட்பின் பெயரால் நாட்டின் பகுதிகளை தானம் செய்வது, ஊழல் , சிறுபான்மையினரை தாஜா செய்வது முதலியன. காந்தி? எந்த காந்தி?

நன்றி இல.கணேசன் ஜி

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

நண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com

Leave a Reply