மத்திய நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் வெங்கையா நாயுடு இல்லத்தில், மகா சங்கராந்தி விழா கொண்டாடப் பட்டது. அப்போது, இந்த விழாவில், கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
 
இந்தியாவின் பாரம்பரியம், நமது திரு விழாக்களில் தான் அடங்கியுள்ளது. உலகத்திலேயே, இயற்கையை நேசிப்பது நமது பாரம்பரியத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பாகும்.
 
இயற்கை குறித்த இந்திய தத்துவத்தின் சாரம்தான், பாரிசில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இயற்கை குறித்து உலகநாடுகள் மீண்டும் கவலைப்பட துவங்கியுள்ளன.
 
இயற்கையுடன் எப்படி இணைந்துவாழ்வது என்பதுதான், உலக மக்களுக்கு முன்பு தற்போது உள்ள மிகப்பெரிய சவால்.
 
எனவே, சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், இயற்கையோடு நாம் இணைந்துவாழ வேண்டும் என்றார்.

Leave a Reply