சர்வதேச மற்றும் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகளில் சிலர் தங்களது திறனை வெளிப்படுத்தி சாதனைகள் புரிய 'எதையும் செய்ய" தயாராக உள்ளனர். சிலர் தங்களது உடல் திறனை அதிகப்படுத்த 'ஊக்க மருந்து"களை பயன்படுத்துவதுண்டு.

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு வீரர்

அல்லது வீராங்கனை 'ஊக்க மருந்து" பயன்படுத்தி இருக்கிறாரா? என்பதை கண்டுபிடிக்க மருத்துவ (ரத்த) பரிசோதனை நடத்தப்படுகிறது.

ஏதென்ஸ் ஒலிம்பிக் பந்தயத்தில் கூட சில வீரர் வீராங்கனைகள் 'ஊக்க மருந்து" சோதனையில் பிடிபட்டனர்.

'ஊக்க மருந்து" என்பதை விட பல மடங்கு சக்தி மிக்கது. 'மரபணு சிகிச்சை" முறை .இந்த மரபணு சிகிச்சை மூலம் ஒரு வீரர் அல்லது வீராங்கனையின் உடல் திறனை அதிகரிக்கச் செய்ய முடியும்.

(இதற்கு உதாரணம் தான் சாதாரண எலி 'மராத்தான் எலி" ஆனது)

ஒரு வீரர் அல்லது வீராங்கனை மரபணு சிகிச்சை பெற்றுள்ளதை எந்த மருத்துவ பரிசோதனை மூலமும் கண்டு பிடிக்க முடியாது.

மராத்தான் எலியை உருவாக்கிய பிறகு, அதை உருவாக்கிய சால்க் இன்ஸ்டிடிய+ட்டை பல வீரர் வீராங்கனைகள் ரகசியமாக அணுகியுள்ளனர். மரபணு சிகிச்சை மூலம் தங்கள் உடல் திறனை அதிகப்படுத்தும் முறைகள் அதற்கான செலவு விவரங் களை கேட்டுள்ளனர்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இனி எல்லோருமே சாம்பியன்கள் தான் என்றாகி விடும்

Tags:

Leave a Reply