பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக திரு.L.முருகன் நியமிக்கப் பட்டதிலிருந்து பலரின் கேள்வி யார் இவர், “எங்களுக்கு இதுநாள் வரை தெரியவில்லையே, அவர் யார்?” எனக் கேட்கிறார்கள்.

இதுதான் பாஜக. இயக்கத்தின் மீது பிடிப்புக் கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை சிறப்பாக செய்து வந்தால் போதும். மற்றதைக் கட்சிப் பார்த்துக் கொள்ளும்.

அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள கோடி கோடியாய் செலவு செய்து ஆர்ப்பரிக்கத் தேவையில்லை. தாத்தா, அப்பா போன்றோர் அரசியலில் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

உதயநிதி ஸ்டாலினைப் போல சினிமா பின்புலம் வேண்டியதில்லை. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் மண்ணாங்கட்டிகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எல்லா சாதியினரும், எல்லா மதத்தவரும் சமம். பாஜகவில் உங்கள் வேலைகள்தான் உங்களை உயர்த்துமே ஒழிய, உங்கள் சாதி, மதம் அல்ல.

60 வயதுக்கு மேலும் இளைஞரணி தலைவராய் இருந்த மு.க.ஸ்டாலின் போல் இல்லாமல்,43 வயது நடந்து கொண்டிருக்கும் போதே நம் இந்திய திருநாட்டை ஆளும் மிகப்பெரிய கட்சியின் தமிழகத் தலைவர் பதவி கொடுக்கப்படுவதெல்லாம் பாஜகவில் மட்டுமே சாத்தியம்!

அப்புறம், திமுகவில் இருப்பதைப் போல கட்சியின் உயர் பொறுப்புகள் கருணாநிதி குடும்பத்துக்கு; ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கியப் பொறுப்புகள்
அந்தந்த மாவட்டத்திலுள்ள சில குடும்பத்தாருக்கு மட்டுமே என்பதெல்லாம் ஒருபோதும் நடக்காது பாஜகவில். எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாதவர்கள் பாஜகவில் சேர்ந்து கட்சி மற்றும் ஆட்சியில் மிகவுயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும்…

எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜக என்பது ஒரு அரசியல்கட்சி மட்டுமல்ல; அதுவொரு மாபெரும் தேச பக்த இயக்கம்!அதில் த லைவர்கள் மாறுவார்கள்; அதன் தத்துவம் மாறாது. அதன் தலைவர்கள் கட்சிக்குத் தேவைப்படுவதைவிட, கட்சி தான் தலைவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

நேற்று வரை, பாஜகவினரைத் தவிர்த்து மற்றவர்களுக்குப் பெரிதாக தெரியாத
திரு.L. முருகன்ஜியை இன்று  இந்த நாடே பேசும்படி வைத்திருக்கிறது பாஜக! அதுதான் பாஜகவின் வலிமை! இந்த உன்னத நிலை தொடரும்…

தேச பக்தியும், பொதுநல எண்ணமும், நேர்மையும், திறமையும், ஓடோடி உழைக்கும் ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் பாஜகவிற்கு வாருங்கள்.
உங்களையும் நம் நாட்டையும் பாஜக மேம்படுத்தும்…

நன்றி திருநாவுக்கரசு

Comments are closed.