சசிகலா டீச்சரின் பேச்சு மிக உருக்கமாக இருந்தது. தமிழகத்தில் இப்படி ஒரு உணர்வுள்ள பெண் பேச்சாளர் இல்லையே என்று வருந்த‌ வைத்தது !! அவரின் பேச்சிலிருந்து ……...

இந்து மதம் என்கிற நம் சனாதன தர்மத்தின் ஆணி வேராக நம் கோவில்கள் இல்லை. ஏனென்றால் பல ஆயிரம் கோவில்களை அழித்த பின்பும் கூட நம் தர்மத்தை ஒன்றுமே செய்ய இயலவில்லை. இந்து மதத்தின் ஆணி வேராக புனித புத்தகங்கள் இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் பல கோடி புனித நூல்களை அந்நியர்கள் அழித்து விட்டனர், ஏன் தக்ஷசீலா பல்கலை கழகத்தையே எரித்து நாசமாக்கினர். இருந்தும் நம் தர்மத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படி நம்முடைய பலவற்றை அந்நிய சக்திகள் அழித்தும் நம் தர்மத்திற்கு எந்த சேதத்தையும் அவர்களால் செய்ய இயலவில்லை.

எது நம் தர்மத்தை தாங்கி நிற்கிறது என்று பார்த்தால் அது நம் குடும்பங்களே !! பல ஆயிரம் வருடங்களாக ஒவ்வொரு குடும்பமும் இந்து தர்மத்தை தாங்கி நிற்கின்றன. எத்தனையோ தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ராம நாமத்தை சொல்ல வைக்கிறார்க‌ள், பக்தியில் லயிக்க வைக்கிறார்க‌ள். ஆனால் அந்த குடும்பத்தை இன்று "லவ் ஜிஹாத்" தகர்த்து கொண்டிருக்கிறது.

அதனால் தான் கேரளத்தில் அவர்கள் கோவில்களை குறி வைக்கவில்லை. கோவில்களில் வழக்கம் போல் உற்சவங்கள் நடக்கின்றன. ஆனால் இன்று கேரளத்தில் அவர்கள் குறி வைத்திருப்பது இந்து குடும்பங்களை.
"லவ் ஜிகாத்" என்கிற மிக கொடுமையானதொரு சூழ்ச்சியால் பல மாணவிகளை குறி வைத்து திட்டமிட்ட முறையில் காய்கள் நகர்த்துகிறார்கள். முதலில் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து, பின்னர் அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள். மதமாற மறுக்கும் மாணவிகளுக்கு நடக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கல்லூரி மாணவி காதல் வலையில் விழுந்து மதமாற மறுத்ததால் அவள் மொட்டையடிக்கப் பட்டு, துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டாள். இதை எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. இதை குறித்து பேசினால் அது மதவாதமாகிவிடும் என்று அவை பயந்தன. இத்தனைக்கும் அந்த பெண்னை வலையில் விழ வைத்தவன் ஏற்கனவே திருமணமானவன். இன்று கேரளத்தில் இந்து குடும்பங்களை திட்டமிட்டு சீரழித்து "பீஃப்" சாப்பிடும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கோவில்களை அழித்தால் கூட கட்டிக் கொள்ளலாம், ஆனால் நம் குடும்பங்கள் போனால் அது ஈடு செய்ய இயலாத இழப்பை ஏற்படுத்தும். அதுதான் இன்று நடந்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply