1. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம்,
2.சிவபெரு மான் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்த இடம், 3. மதுரைக் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், ஆலவாய் இறைவன் சொக்கநாதரின் கட்டளைப்படி சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக, சங்கப்பலகை தாங்கியிருந்தது.

4.நக்கீரரின் திரு முருகாற்றுப்படை தோன்றிய இடம்,
5.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்,
6. முருக னின் ஆறுபடை வீடுகளில் மற்றொன்றான பழமுதிர்சோலை, 7.வைஷ்ணவ திவ்ய தேசங்கள் 108இல் ஒன்றான அழகர் கோயில் உள்ள இடம்;

8. திருக்குறள் அரங்கேறிய இடம், 9. மணிமேகலை காப்பியம் தோன்றிய இடம்,
10. திருவாசகம் தந்த மணிவாசகர் வாழ்ந்த இடம்,
11.சைவ சமயத்தின் பெருமையைத் திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய இடம்,
12.சைவத் திருமுறைகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இடம்,
13.பெரியாழ்வார் "பல்லாண்டு பாசுரம்' பாடிய இடம்,

14. பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் நான்கு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1. மங்கையர்க்கரசியார், 2.நின்றசீர் நெடுமாறன், 3.குலச்சிறையார், 4. மூர்த்தி நாயனார்; 15.திருவிளையாடல் புராணம் பிறந்த இடம்,
16. குமரகுருபரர் "மீனாட்சி பிள்ளைத் தமிழ்' பாடிய இடம்,
17. சைவ சமய ஆச்சாரியரான குருஞானசம்பந்தர் "சொக்கநாத வெண்பா' பாடிய இடம்,
18. மீனாட்சி சந்நதி பிராகாரத்தில் "கூடல் குமரன்' முருகன் எழுந்தருளியுள்ளார். இவரைப் பற்றிய பாடல் அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம் பெற்றிருக்கிறது. இவ்விதம், தமிழ் இலக்கியங்களில் முதலிடம் பெற்ற இடம் மாமதுரை மூதூர். "மூதூர்' என்ற சொல்லுக்கு, "பழைய ஊர்' என்றுதான் பொருள். ஆனால் தமிழ் இலக்கியங்களில், "மூதூர்' என்றால் அது மதுரைத் திருத்தலத்தை மட்டும்தான் குறிக்கும்.

TAGS; தமிழ்ச் சங்கம் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக, பொற்றாமரைக் குளம் , நக்கீரரின் திரு முருகாற்றுப்படை, அழகர் கோயில் மணிமேகலை காப்பியம், திருஞானசம்பந்தர், பெரியாழ்வார் , பெரிய புராணம்,

Leave a Reply