மகாராஷ்ட்டிராவில் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை போலியாககாட்டி கோடிக்கணக்கில் பணம் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இந்தமாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிரடிசோதனை மேற்கொள்ளபட்டது. இதில் பல மாவட்டங்களில்

பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி அதற்க்கான பண உதவியையும் பெற்றுள்ளனர்.

நந்தடு மாவட்டத்தில் மட்டும் 3500 பள்ளிகளில் 7_லட்சம் மாணவர்கள் உள்ளதாகவும் இதில் 140000 மாணவர்கள் போலியானவர்கள் என தெரியவந்துள்ளது . இதில் மட்டும் 120 கோடி ரூ அதிகமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது,

இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த வகையில் மட்டும் முறைகேடுதொகை 1000 கோடியை தாண்டும் என தெரியவந்திருக்கிறது. சோதனை நடந்த போது காலையில் இருந்த_மாணவர்கள் மதியம் கணக்கிற்க்காக காட்டப்பட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply