மேற்கு வங்கத்தில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதா ? . பர்த்வான் குண்டுவெடிப்புக்கு பொறுப் பேற்று முதல்வர் மம்தா பதவி விலகவேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பர்த்வான் என்ற இடத்தில் கடந்த 2ம்தேதி குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் திரிணாமுல் தலைவர் ஒருவர் வீட்டில் தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த குண்டு வெடித்தன. இதில் ஷகில் அகமது, சுபான் ஆகிய 2 தீவிரவாதிகள் இறந்தனர் . இந்த விவகாரத்தில் பாஜ, திரிணாமுல் இடையே கடும்மோதல் நிலவி வருகிறது. குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்திவருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அதன் தலைவர் சரத்குமார் நேரில் ஆய்வுசெய்தார்.

என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் பங்களாதேஷை சேர்ந்த ஜமாத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பு தான் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் சாரதா சிட்பண்ட் மோசடியில் சுருட்டப்பட்ட கோடிக்கணக்கான பணம் இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு செல்வதாக பாஜ குற்றம் சாட்டி வருகிறது.

இதுகுறித்து பாஜக தலைவர் சித்தார்த் சிங் கூறுகையில், முதல்வர் மம்தா அரசு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது. சாரதாசிட்பண்ட் மோசடியில் சுருட்டப்பட்ட கோடிக் கணக்கான பணம் பங்களாதேஷில் உள்ள ஜமாத் உல் முஜாகி தீன் தீவிரவாதி களுக்கு செல்கிறது. பின்னர் அவர்கள் அதனை கொண்டு மேற்குவங்கத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இதற்கு தார்மீக பொறுப் பேற்று முதல்வர் மம்தா பதவி விலகவேண்டும் என்றார்.

Tags:

Leave a Reply