பஞ்ச் குலாவில் உள்ள ஊரக மேம்பாட்டுத் துறை மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஹரியானா ஆளுநர் கப்டன்சிங், மனோஹர் லால் கட்டருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தவிழாவில் கலந்து கொண்டனர். இதனையொட்டி, பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. கடந்த 1966ம் ஆண்டு ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க 47 இடங்களில் வெற்றிபெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. பின்னர் நடந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் மனோகர் லால் கட்டார், முதல் அமைச்சராக தேர்வு செய்யப் பட்டார்.

இதுவரை பாஜக சேர்ந்த எந்த ஒருதலைவரும் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்ற தில்லை. இந்தநிலையில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முதலமைச்சராக மனோகர் லால் கட்டர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது

Leave a Reply