தமிழக மாணவர்கள் , இளையவர்களுக்கு:

நான் வீடியோ பதிவில் வெளியிட்ட எந்த தகவலும் பொய் அல்ல. என் மட்டத்தின் நான் தேடிச் சேகரித்தவை , அது தவறு என்று திமுக நிரூபிக்காமல் நான் சொல்வது பொய் என்று பரப்புவது என்ன எதிர் வினை??? நானே சொல்கிறேன் மாரிதாஸ் சொல்லும் எதையுமே நம்பாதீர். என்னை மட்டும் அல்ல திமுக திக மே17 என்று எவரையும் நம்பாதீர் மாணவர்கள் இளைஞர்கள் உண்மை எது என்று தேடிப் படியுங்கள். அவ்வளவு தான் நான் கேட்டுக்கொள்வது.

திமுக புகார் எழுப்பியுள்ள வீடியோவில்

1.தமிழகத்தில் பிரிவினைவாத போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்ற கேள்விக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் தகவல் கொடுத்துள்ளேன். டைசன் – திருமுருகன் காந்தி பற்றிய நான் வெளியிட்ட தகவல் உண்மை. அது வெறும் 10% கூட கிடையாது. வேண்டும் என்றால் முழுமையாக வெளியிடவும் தயார்.

2.இந்த போராட்டக்காரர்களுக்கும் நாட்டின் பிரிவினைவாதம் தூண்டிவிட நினைக்கும் அன்னிய சக்திகளுக்கும் இடையே வேலை செய்யும் ஹவாலா முகவர்கள் பற்றி நான் வெளியிட்ட தகவலும் உண்மை. அதற்கு ஆதாரமாக மார்டீன் – D Company விவகாரம் எடுத்தேன். அதனைத் தாராளமாகத் தேடலாம்.

3.இந்த ஹவாலா பணத்தை உள்ளே கொண்டு வந்த வகையில் திமுக இதனால் தொடர்பில் இருக்கிறதா என்றால் இல்லை என்று 100% மறுக்க முடியாது. ஏன் என்றால் மார்டீன் திமுக நெருக்கம் உலகம் அறிந்த உண்மை.

இப்போ இறுதியில் நான் சொல்ல விரும்புவது காஷ்மீர் பிரிவினைவாதிகள் – அரசியல் கட்சி – ஹவாலா பணம் என்ன தொடர்பு இருக்கிறதோ அதே தொடர்பு தான் இங்கேயும். காஷ்மீர் பொறுத்தவரை “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்” என்று அவ்வளவு அமைதியாக இருந்த இடத்தை அமைதி இல்லாத இடமாக நரகமாக மாற்றியது முழுக்க முழுக்க இந்த பிரிவினைவாதிகள் அதன் கூட்டாக வேலை செய்யும் கட்சிகள் தான். இன்று நாட்டிற்கே பெரும் தலைவலியாக மாறிவிட்டது அத்தோடு தீவிரவாதம் இந்தியாவிற்கு வரும் வழி போல் ஆகிவிட்டது.

அதே போல் தமிழகம் மாறி வருகிறது கடந்த சில ஆண்டுகளில். அனைத்து பக்கமும் போராட்டத்தைத் தூண்டுகிறார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் சக்தி ???? அதை ஆய்வு செய்து வெளியிட வேண்டும் என்று அந்த வீடியோ வெளியிட்டு அதில் மேற்கொண்டு மத்திய மாநில அரசு , நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். திமுக தொடர்பு இருக்கும் என்றால் தடை செய்யவேண்டும் என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்????

மீண்டும் சொல்கிறேன் “தயவு கூர்ந்து என்னை நம்பாதே, நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே. நான் சொல்வதை சரியா என்று தேடி படி , பின் சுய புத்தியோடு சிந்திக்கவும்”.

தேசம் நலனுடன் எந்த சமரசமும் கிடையாது. திமுக அல்ல தேசத்திற்கு எதிரான எந்த சக்தியையும் எதிர்கொள்வதில் தயக்கமும் இல்லை.

என் மீது விசாரணை என்றால் திமுக மீதும் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

{ஒரு பகுதி ஆதாரங்கள் இதில் இணைத்துள்ளேன். வேண்டும் என்றால் அடுத்து அடுத்து வெளியிடவும் தயார்.}

-மாரிதாஸ்

Comments are closed.