உத்திரபிரதேசத்தின் முதல்வர் மாயாவதியினுடைய ஷூவை போலீஸ் அதிகாரி தனது கர்ச்சீப்பால் குனிந்து துடைத்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது,

அவுரியாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். ஹெலிகாப்டரிலிருந்து கிளம்பிய புகையின் காரணமாக அவரது கால் ஷூ முழுவதும்

தூசி படிந்தது.இதை கண்ட அவரது பி.எஸ்.ஓ. (பெர்சனல் செக்ரியூட்டி ஆபீசர்,) மாயாவதியை நோக்கி ஓடினார். பிறகு தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்து மாயாவதியின் கால் ஷூவை குனிந்து சுத்தம் செய்தார். அவர் சுத்தம் செய்ததை மாயாவதி கண்டுகொள்ளவில்லை.

பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரியை இப்படி அடிமைத்தனமாக நடத்தி காட்டியது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது,

கீழே வீடியோவில் பார்த்து கொள்ளலாம்

{qtube vid:=wxF-vFpS-08}

Leave a Reply