பிரேசில் நாட்டின் அதிபராக 2வது முறையாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள டில்மா ரூஸஃபுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி தனது சுட்டுரை (டுவிட்டர்) வலை தளத்தில், "பிரேசில் அதிபராக டில்மா ரூஸஃப் தேர்வு செய்யப்பட்டதுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய-பிரேசில் உறவை வலுப்படுத்தும் விதமாக, வரும்காலங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

ஹிலாரிக்கு வாழ்த்து: இதனிடையே, தனது 67 பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமை கொண்டாடிய அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது டுவிட் டர் வலை தளத்தில், "நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் ஹிலாரி வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply