அவதூறுகளின் ராஜா என்ற பட்டத்தை யாரேனும் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலே அவர்களுக்கு அரவிந் கேஜ்ரிவால் தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை மற்றவர்கள் மீது அள்ளி வீசுவதில் கைத்தேர்ந்தவர்.

 

முதலில்  நிதின் கட்காரியின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். வழக்கு நீதிமன்றம் வரைச் சென்றது. ஒரு கட்டத்தில்  நிருபிக்க ஆதாரம்மின்றி சமரசம் செய்து கொள்ளலாம் என்று அரவிந் கேஜ்ரிவாலின் வழக்கறிஞரே இறங்கி வரும் அளவிற்கு நிலைமைச் சென்றது.

 

பின்னர் அருண் ஜேட்லியின் மீது அவதூறுகளை அள்ளி வீசினார். தற்போது நிரூபிக்க ஆதாரமின்றி தவிக்கிறார், வழக்கம்போல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

ஏன் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட டெல்லியிலேயே முன்னாள் முதல்வர் ஷீலா தீசித் மீது தான் சுமத்திய ஊழல் குற்றச் சாட்டைக்கூட நிரூபிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஆதாரமற்ற அவதூறுகளை பரப்ப தொடங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், 1983-ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர் . இந்நிலையில் பிரதமர் டிகிரி எதுவும் பெறவில்லை பொய்யுரைக்கிறார் என்றார். உரிய ஆவணங்களை வெளியிட்டப்பின் இப்போது ஒவ்வொரு சான்றிதழிலும் பெயர் மாறுபடுகிறது உதாரணத்துக்கு ஒரு சான்றிதழில் நரேந்திர குமார் தாமோதர் தாஸ் மோடி என்றும் மற்றொன்றில்  நரேந்திர தாமோதர் மோடி  என்றும் உள்ளது எனவே இது போலி என்று அவதூறுகளை கிளப்பியுள்ளார் கேஜ்ரிவால். 

 

பொதுவாக 1970, 1980ம் ஆண்டைய காலக்கட்டம் கல்வித்துறையில்  ஊழல்களோ, போலிச் சான்றிதல்களோ இல்லாத காலக்கட்டம்.   அன்றைய காலக்கட்டத்தில் மதிப்பெண்கள் எடுப்பதும் தேர்ச்சி பெறுவதும் எளிதான ஒன்றும் அல்ல. ஆனால் பிரதமர் மோடி M.A அரசியலில் 62.3% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

 

மேலும் அன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தகவல்களும் கைகளாலேயே எழுதப்படும், எனவே முழுப்பெயரும் விடுப்பட்டு போவதும், பிழைகள் அதிகம் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தது. இன்றைய கணினி யுகத்திலேயே வாக்காளர் அட்டையில் ஒரு பெயரும் , குடும்ப அட்டையில் ஒரு பெயரும் பிழையாக இடம்பெறுவதை சகஜமாக நாம் காணலாம். எனவே நரேந்திர குமார் தாமோதர் தாஸ் மோடி, நரேந்திர தாமோதர் மோடி  என்பதெல்லாம் கவனக் குறைபாடுகளே. அந்த காலக் கட்டத்தில் வழக்கமான ஒன்றாகிப்போன சொற்ப்பிளைகளே.

 

மேலும் பிரதமர் நரேந்திர மோடி நான் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவன், சிறு வயதில் ரயில்வே கேண்டினில் டீ விற்றவன் என்றுதான் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். இவரது பிரச்சாரத்தைக் கண்டு ஒருக் கட்டத்தில் வெகுண்டு எழுந்த லல்லு பிரசாத் யாதவ் சிறு வயதில் நானும் டீ விற்றிருக்கிறேன்  என்றார். ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்கள் தாங்களும் சிறு வயதில் டீ விற்றிருக்கலாமோ என்று எண்ணி வருத்தப்படும் அளவிற்கு, அடித்தட்டு மக்களை  பெருமைப்படுத்தும் அளவிற்கு அவரது பிரச்சாரம் சென்றது. அவர் ஒருபோதும் தனது படிப்பையோ!, பட்டத்தையோ பிரதானப் படுத்தியதில்லை.

 

ஆனால் ஐஐடி, ஐஆர்எஸ் என்று மேத்த படித்ததாக கூறிக்கொள்ளும் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் படிப்பைத் தவிர தற்பெருமையாக கூறிக்கொள்ள வேறொன்றும் இல்லை, அவரிடம் ஜொலிப்பது அனைத்தும் போளித்தனங்களே.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply