குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காந்தி நகரில் இருக்கும் மகாத்மா-மந்திரில் ஜனவரி 12-ம் தேதி தொடங்கும் “துடிப்பான குஜராத் 2011′ மாநாட்டில் பங் கேற்குமாறு நேற்று சென்னையில் தொழிலதிபர்களுடன் நடந்த ஆலோசனையில் அழைப்பு விடுத்தார்,

“துடிப்பான குஜராத் மாநாடு” இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகினறது. முதலீட்டாளர்கள், வர்த்தக தலைவர்கள், சிந்தனையாளர்கள், கொள்கைககருத்துகள் உருவாக்குவோர் ஆகி அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் இம்மாநாடு நடத்தப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் தொழில் வாய்ப்புகள் மற்றும் வசதிகளை தெரிந்துகொள்ள இந்த மாநாடு ஒரு வாய்ப்பாகும். இதற்கு முன்பு நான்கு மாநாடுகள் வெற்றிக் கரமாக நடைபெற்றுள்ளன. இதன் மூலம் 12 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

“துடிப்பான குஜராத் 2011′ மாநாட்டில் தமிழக திலிருந்து 400க்கும் அதிகமான தொழில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில நிறுவனங்கள், பங்கேற்பர் என தெரிகின்றது. கோவா, கர்நாடகம், ராஜஸ்தான், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழில்நிறுவனங்களும் 70க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்களும் இம்மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்ல ஆட்சியாளரை பெற்றிருக்கிறார்கள்

Tags:

Leave a Reply