என்கவுன்டரில் கொல்லப்பட்ட வேன்டிரைவர் மோகன் ராஜ் உடல் பிரேதபரிசோதனைக்கு பின் அவரது தந்தையிடம் ஒப்படைக்கபட்டது. 36 மணி நேரத்துக்கு பின் உடல்தகனம் செய்யப்பட்டது.

பிரேதபரிசோதனை முடிந்த பின் மோகன்ராஜின் உடலை அவரது தந்தை ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அப்போழுது ராதா கிருஷ்ணன், மோகன்ராஜின் மனைவி ஆரோக்கிய மேரி மற்றும் மாமியார் ஆகியோர் இருந்தனர். இதனை அடுத்து மோகன்ராஜின் உடலை ஆம்புலன்சில் எடுத்துசென்று போலீஸ் உதவியுடன் கோவை பாப்பநாயக்கன் பாளையம் சுடுகாட்டில் மாலை 5 மணிக்கு தகனம் செய்தனர்.

Leave a Reply